best blogger tipsGet snow effect
உலக முழுதுந் தொழுதேத்தி
...உய்ய வெனவே சதுரகிரி
இலக வமர்ந்த பெருமானை
...யிலிங்க மயமா யிருப்பாவைக
கலக மயக்கங் கழன்றோடக்
...கடையே னுளத்துங் குடி கொண்ட
அலகில் சோதி மகாலிங்கர்
...ஆடிப்பு என்றன் முடிக் கணியே.
 
 
தென் தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில்
சதுரகிரி மலை அமைந்துள்ளது. சதுரம்-நான்கு, கிரி-மலை, நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்திருப்பதால் இதனை 'சதுரகிரி' என்றுஅழைக்கிறார்கள்.
 
கிழக்குத் திசையில் இந்திரகிரியும்,
தென்திசையில் ஏமகிரியும்,
மேற்குத் திசையில் வருணகிரியும்,
வடதிசையில் குபேரகிரியும்,
இவற்றின் மத்தியில் சிவகிரி,
பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சப்தகிரி
என்னும் நான்கு மலைகளும் அமைந்திருக்கிறது.
இது தவிர இந்நான்குமலைக்கு மத்தியில்
சஞ்சீவி என்ற ஓர் அற்புத மலையும் இருக்கிறது.
இத்திருத்தலம் பஞ்சபூச லிங்கத்தலமாகும்.
இவற்றில் அருள்மிகு சுந்தரமூர்த்தி ஆரிடலிங்கமாகும்.
அருள்மிகு சந்தன மகாலிங்கம் தைவிக லிங்கமாகும்.
அகத்தியர் முதலான பதினெட்டுசித்தர்கள் வாழ்ந்து வழிப்பட்டதும் இத்திருத்தலம்.
 
இத்திருத்தலத்திற்கு ஒரு முறைவருகை தந்து
சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.
இத்தலத்தில் அமைந்துள்ள சந்திர தீர்த்தம்,
கெளண்டின்ய தீர்த்தம்,
ஆகாய கங்கைதீர்த்தம்
ஆகியவற்றில் நீராடிவர்கள்
பரமானந்த வாழ்வைப் பெற்று மகிழ்வார்.
புத்துணர்வு பெறுவர்.
 
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி;
சிதம்பரத்தை வணங்கினால் முக்தி;
திருவாரூரில் பிறக்க முக்தி கிடைக்கும்.;
காசியில் இறக்க முக்தி.
இந்தச் சதுரகிரி தலத்திலோ
இந்த நால்வகை முக்தி கிடைக்கும் என்பர்.

சதுரகிரி மலையே சிவமாக இருப்பதால்

சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மதுரையில் இருந்து வத்திராயிருப்புக்கு செல்லும் வழியிலுள்ள தாணிப்பாறை பிரிவில் (58 கி.மீ.,)இறங்கி, அங்கிருந்து சதுரகிரி மலை அடிவாரத்திற்கு பஸ் அல்லது ஆட்டோவில் (7கி.மீ.,) செல்ல வேண்டும். இங்கிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது.

இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். 














0 comments:

Post a Comment