best blogger tipsGet snow effect
உலக முழுதுந் தொழுதேத்தி
...உய்ய வெனவே சதுரகிரி
இலக வமர்ந்த பெருமானை
...யிலிங்க மயமா யிருப்பாவைக
கலக மயக்கங் கழன்றோடக்
...கடையே னுளத்துங் குடி கொண்ட
அலகில் சோதி மகாலிங்கர்
...ஆடிப்பு என்றன் முடிக் கணியே.
 
 
தென் தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில்
சதுரகிரி மலை அமைந்துள்ளது. சதுரம்-நான்கு, கிரி-மலை, நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்திருப்பதால் இதனை 'சதுரகிரி' என்றுஅழைக்கிறார்கள்.
 
கிழக்குத் திசையில் இந்திரகிரியும்,
தென்திசையில் ஏமகிரியும்,
மேற்குத் திசையில் வருணகிரியும்,
வடதிசையில் குபேரகிரியும்,
இவற்றின் மத்தியில் சிவகிரி,
பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சப்தகிரி
என்னும் நான்கு மலைகளும் அமைந்திருக்கிறது.
இது தவிர இந்நான்குமலைக்கு மத்தியில்
சஞ்சீவி என்ற ஓர் அற்புத மலையும் இருக்கிறது.
இத்திருத்தலம் பஞ்சபூச லிங்கத்தலமாகும்.
இவற்றில் அருள்மிகு சுந்தரமூர்த்தி ஆரிடலிங்கமாகும்.
அருள்மிகு சந்தன மகாலிங்கம் தைவிக லிங்கமாகும்.
அகத்தியர் முதலான பதினெட்டுசித்தர்கள் வாழ்ந்து வழிப்பட்டதும் இத்திருத்தலம்.
 
இத்திருத்தலத்திற்கு ஒரு முறைவருகை தந்து
சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.
இத்தலத்தில் அமைந்துள்ள சந்திர தீர்த்தம்,
கெளண்டின்ய தீர்த்தம்,
ஆகாய கங்கைதீர்த்தம்
ஆகியவற்றில் நீராடிவர்கள்
பரமானந்த வாழ்வைப் பெற்று மகிழ்வார்.
புத்துணர்வு பெறுவர்.
 
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி;
சிதம்பரத்தை வணங்கினால் முக்தி;
திருவாரூரில் பிறக்க முக்தி கிடைக்கும்.;
காசியில் இறக்க முக்தி.
இந்தச் சதுரகிரி தலத்திலோ
இந்த நால்வகை முக்தி கிடைக்கும் என்பர்.

இறைவன் உடன் சேர்ந்து சித்தர்களும் நமக்கு ஆசிகள் வழங்குகிறார்கள்








தமிழ் நாட்டில் பல பிரலமான கோவில், மலைகள் உண்டு அங்கு இறைவன் நின்று மக்களுக்கு அருள் ஆசிகள் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சதுரகிரியில் மற்றும் இறைவன் உடன் சேர்ந்து சித்தர்களும் நமக்கு ஆசிகள் வழங்குகிறார்கள் இந்த மலையில் தனித்துவம் பெற்ற ஒரு சில சித்தர்கள் இல்லாமல் பற்பல சித்தர்கள் ஒன்று கூடி இறைவனுக்கு தொண்டு செய்ய பவுர்ணமி, அமாவசை, மிகமுக்கிய நாள்களில் மலை வலம் வருவதுடன் நம்முடம் ஒன்றாக கலந்து இறைவனை தரிசிக்க வருகிறார்கள் வான்மீகி, கோரக்கர், கமல முனி, சட்டை முனி, அகத்தியர், கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச்சித்தர், ராமதேவர், இடைக்காட்டுச் சித்தர், திருமூலர், போகர், அழுமுணிச் சித்தர், காலாங்கி நாதர், மச்சமுனி போன்ற சித்தர்கள் சதுரகிரியில் வாழ்ந்து யோகத்தில் திளைத்தனர், வேள்விகள் செய்த மலை சதுரகிரி. இந்திரகிரி மலை, வருணகிரி மலை, குபேர கிரி, ஏம கிரி, என 4 மலைகளுக்கு மத்தியில் சிவ கிரி, பிரம்ம கிரி, விஷ்ணு கிரி, சித்த கிரி 4 மலைகளும் சேர்ந்த மலைபிரதேசம் சதுரகிரி, இவை மற்றும் இல்லாமல் மற்றும் ஒரு சிறப்பு பற்பல முலிகை வளம் கொண்ட பகுதி உலோகத்தை தங்கம்மாக மற்றும் முலிகையும் உண்டு. இளமையை தக்கவைத்துக்கொள்ள மாமருந்தும் இங்கு உண்டு, ஒளிரும் தாவரமும், பிணி நீக்கும் முலிகை இருக்கிறது.




சதுரகிரில் ஸ்ரீசுந்தர மகாலிங்கம், ஸ்ரீசந்தன மகாலிங்கம், ஸ்ரீ சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பர், ரெட்டை லிங்கம், பெரிய லிங்கம், பேச்சியம்மன், கருப்பண்ணசாமி, சிறப்பிக்கும்மிடம், நாம் கஷ்டங்கள் தொலைந்தயிடம், சோகங்கள் மறைந்தயிடம், துன்பங்கள் துறந்தயிடம், நமக்கு பற்பல செல்வங்கள் தரும்மிடன் சதுரகிரி மலை

1 comments:

சிவ.வள்ளியப்பன் said...

sir Im from Karaikudi 13 years back I went to sathuragiri mahalingam for worship and also to find my grand fathers samathi who was died their as a samiyar 62 years back but i cant find the samathi is their anybody to help me to find the samathi if so please contact to my id valliappansv@gmail.com

Post a Comment